திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிக்கந்தர் பாஷா வீதியில் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உடுமலை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் உடுமலையைச் சேர்ந்த மனோஜ் குமார்(26), மைதீன் பாஷா(33), திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா புது ஆயக்குடியைச் சேர்ந்த சதாம் உசேன்(33) ஆகியோர் சரக்கு வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் மனோஜ் குமார் என்பவரை கைது செய்தனர். அத்துடன் 205 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.