மடத்துக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள் செல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் நிலை உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி