மடத்துக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு கிராமப்புற பேருந்துகள் தவிர விரைவு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்வதில்லை. இதனால், சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி