திருக்கோவிலூர் வீரப்பன் கோவிலில் தை கடைசி திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் உள்ள சண்டி வீரப்பன் கோவிலில் இன்று தை கடைசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பூ கரகத்தில் உள்ள நீரால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கும்பம் கொட்டுதல் திருவிழாவும், பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், கும்பம் சாப்பாடும் வழங்கப்பட்டது. இறுதியில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்த திருவிழாவை ஊர் மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி