திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழவு கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழா நிறைவடைந்த நிலையில், நேற்று நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் ₹1 லட்சத்து 89 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக இருந்தது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை சரக அலுவலர் சரவணகுமார், செயல் அலுவலர் ஆனந்தி மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.