திருப்பூர் மடத்துக்குளம் பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். காலை நேரத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அத்துமீறலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.