மடத்துக்குளம் அருகே கள் விற்பனை ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆண்டிய கவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக குமரலிங்கம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், கள் விற்பனை செய்து கொண்டிருந்த கவி பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி