திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மானுபட்டி ஊராட்சியில் மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகரிக்க மரக்கன்றுகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாற்றுப்பண்ணையில் நெல்லி, சீதா, புளி, பென்சில், வாகை, மாதுளை, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகின்றன. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.