அப்போது தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணி புரியும் குரு பிரசாத் என்பவர் பள்ளிக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் உடுமலையிலிருந்து வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியபோது சுமார்
20 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதும் பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் குரூபிரசாத் உடுமலை அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் (வயது 27) திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.