மடத்துக்குளம் அருகே விபத்து ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி திருமூர்த்தி மலையில் கோவில் கும்பாபிஷேகம் வரும் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது கோவிலில் வேலைகள் இறுதிக் கட்டமாக நடைபெற்று வருகின்றன. 

கும்பாபிஷேகம் அன்று அம்மன் படத்துடன் சீரியல் செட் வைப்பதற்காக பிரதான சாலையில் மரக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் தற்போழுது உயர்மின் அழுத்தக் கம்பிகள் மிக அருகாமையில் இருப்பதால் விளக்குகள் மாற்றும்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி