மடத்துக்குளம் அருகே அரிய வகை தேவாங்கு மீட்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கடத்தூர்பகுதியிலுள்ள கோவில் மரத்தில் அரிய வகை தேவாங்கு சுற்றிதிரிந்தது இதனைகண்ட காக்கைகள் அதனை கொத்திகாயப்படுத்த கீழே நாய்கள் சுற்றி கொண்டிருக்க செய்வதிறியாது அங்கும் இங்கும் ஒடிகொண்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் விளையாட வந்த சிறுவர்கள் வசந்த் அரவிந்த் கோகுல்ஸ்ரீ மற்றும் திவாகர் ஆகிய நால்வரும் பயத்தால் நடுங்கிகொண்டிருந்த தேவாங்கை பத்திரமாய் மீட்டு ஊர் பெரியவர்களுக்களிடம் சொல்ல அவர்கள் வனத்துறை க்கு தகவல் தந்து அவர்கள் வந்ததும் பத்திரமாய் ஒப்படைத்தனர் இதனிடையே அரிய வகை தேவாங்கை பத்திரமாய் மீட்ட சிறுவர்களை அனைவரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி