திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 874 கிலோ எடையுள்ள 2200 உரித்த தேங்காய்களை 7 விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 57.11 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 53 க்கும், சராசரியாக ரூ. 54 க்கும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 47,607 ஆகும்.