மடத்துக்குளம் அருகே மழையால் நெல் பயிர்கள் சேதம்

திருப்பூர் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக காய வைப்பதற்கு போதுமான நெல் உலர் கலங்கள் இல்லாததால், விவசாயிகள் சாலை ஓரங்களிலும் கோவில் நிலங்களிலும் நெல்லைக் குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் நெல்மணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி