திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 பள்ளிகளில் உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 78 பேர் விண்ணப்பித்த நிலையில் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சத்துணவு ஹேமலதா, தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேர்காணல் நடத்தினர்.