திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், சோழமாதேவி, பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் சாமிநாதன் அவர்கள் வழங்கினார். உடன் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.