திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர். மேலும், மடத்துக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.