ஏற்கனவே தனது கடன் மற்றும் நகைகள் அடமானத்தில் உள்ள நிலையில் நண்பரின் வங்கி கடனை கட்ட முடியாமல் தாமோதரன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து பலமுறை வங்கியில் புகார் அளிக்கும் போதும் நடவடிக்கை எடுக்கப்படாமல், வங்கி அதிகாரிகள் அலட்சியமாகவும் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் முடைந்த தம்பதியர்கள், கனரா வங்கி ஜோத்தம்பட்டி கிளை முன்பாக தனது தின்னரை (thinner), தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி கனரா வங்கி மேலாளரால் கணவன் மனைவி தின்னரை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.