திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரை சேர்ந்த சூர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மே 16 அன்று திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி சூர்யாவுக்கு 3ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பு அளித்தார்.