திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தத் தற்போது இந்த பாலத்தை இரவு நேரங்களில் கடக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டுனர்களுக்கு பயனளிக்கும் வகையில் மின்விளக்குகள் பந்தல் இல்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த காரணத்தால் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.