திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆனைமலை பிரதான சாலையில் தும்பலப்பட்டி பிரிவு பகுதியில் திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆன நிலையில் தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.