மடத்துக்குளம்: குண்டும் குழியமான சாலையால் அவதி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பி. லேஅவுட் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை பெய்யும் நாட்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையில் வாகனங்கள் செல்வதற்கு முடியாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி