மடத்துக்குளம்: மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திருமூர்த்தி அணை மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போழுது 3-ம் மண்டல பாசனத்தில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போழுது பிஏபி தொகுப்பு அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதோடு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக இருப்பதால் அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் வழியாக 852 கனஅடியாக குறைந்துள்ளது. 

இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது. தற்போழுது மொத்த 60 அடியில் 33.75 அடியாக உள்ளதால் அணையின் குறிப்பிட்ட பகுதி நீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் ஆடுகள் மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி