மடத்துக்குளம்: உயிரிழந்த கோழிகளை சாலையோரம் வீசும் அவலம்

திருப்பூர் மடத்துக்குளம் அருகே உடுமலை தாராபுரம் சாலையில் நோய் பாதிப்புடைய இறந்த கோழிகளை சாலையோரம் வீசி செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இறந்த கோழிகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி