திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பேரூராட்சியில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.