திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு உள்ள அமராவதி பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் இந்தப் பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லை, இதனால் இங்கு மின்விளக்குகள் பிரதிபலிப்பதை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.