திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரலிங்கம் கிளைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் வடிவேல் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினார். மாவட்டச் செயலாளர்கள் பஞ்சலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.