திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்பொழுது இயந்திரங்கள் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. எனவே தேவையான நிதி ஒதுக்கி ஆலையை செயல்படுத்த கோரி வரும் ஐந்தாம் தேதி விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.