திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் இன்று போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்து, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். விரிவுரையாளர்கள் பல வாரங்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.