மடத்துக்குளம்: அமமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு (அமமுக) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் சி. சண்முகவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், போடிபட்டி, பள்ளபாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் அதிமுக, பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி