மடத்துக்குளம் சம்பவம்: மருத்துவ பணிகள் இயக்குனர் அறிவிப்பு

திருப்பூர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் ஆப்பிள் துண்டு தொண்டையில் சிக்கிய குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என பொதுமக்கள் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் இரு மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி