திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அமராவதி ஆற்றுக்கு துணி துவைக்க வரும் பொதுமக்கள் துணிகளை ஆற்றில் விட்டுச் செல்வதால் நீர் மாசடைந்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகை மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.