திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியைச் சேர்ந்த இன்பத்தமிழன் என்ற சிறுவனுக்கு ஆப்பிள் துண்டு தொண்டையில் சிக்கியதால், மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து பொதுமக்கள் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.