திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதி ஆற்றில், மீனவர் நலத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டனர். இந்த நடவடிக்கை அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.