திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் நீதிமன்றம் கட்ட ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலத்தை விவசாயம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயிகள், நேற்று திடீரென அந்த நிலத்தில் உழவுப்பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்ட பணிகள் நடப்பதாக வட்டாட்சியர் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.