திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவாரே ஆகியோர் ஆய்வு செய்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வில் மடத்துக்குளம் வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.