திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உடுமலை தாராபுரம் சாலையில் துங்காவி ஊராட்சிக்குட்பட்ட பாறையூரில் அரசு பள்ளி மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள மரங்கள் சில தினங்களாகவே தீ வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழமையான மரங்களுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.