திருப்பூர்: கார் சாலை தடுப்பில் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வழியாக பொள்ளாச்சி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் வேடப்பட்டி பகுதியில் அடிக்கடி சாலையில் குறிக்கத் தடுப்புகள் வைத்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு சாலையின் மைய தடுப்பில் வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முறையான எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி