மடத்துக்குளம்: வழித்தவறி வந்த உடும்பு மீட்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திண்டுக்கல் மாவட்ட எல்லையான புஷ்பத்தூர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் பகுதியில் உடும்பு ஒன்று சிக்கியதாக பொதுமக்கள் மடத்துக்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மேம்பாலத்தில் வழி தெரியாமல் ஏறி மாட்டிக்கொண்ட சுமார் மூன்று அடி நீளம் உள்ள உடும்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த உடும்பை அமராவதி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி