மடத்துக்குளம் பகுதியில் வெல்லம் விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சாமராயப்பட்டி, கொழுமம், குமரலிங்கம் போன்ற பகுதிகளில் அச்சு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை 30 கிலோ கொண்ட ஒரு சிற்பம் ₹1500 வரை விற்று வந்த நிலையில், தற்போது ₹1330 ஆக விலை குறைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரிய ஆதாரங்களுடன் நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி