மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ரயில் நிலையம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. ஆனால் தற்போழுது பல்வேறு விரைவு ரயில்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இரண்டு ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. 

மேலும் சுகாதாரமற்ற நிலையால் பயணிகள் பலரும் ரயில் பயணத்தை தவிர்க்கின்றனர். ரயில் நிலையத்தில் பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாமல் சீமைக் கருவேலமரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி