திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் வேளாண் அதிகாரிகள் எஸ்ஐஆர் பணிக்கு சென்றுள்ளதால், விதை தேவை மற்றும் உரப் பரிந்துரைகள் போன்றவற்றை பெறுவதற்காக வேளாண்மை அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஒரு அதிகாரியாவது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.