திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், தமிழக அரசின் அறிவிப்பை மீறி, அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், மதுபான கூடத்தின் சுகாதாரமற்ற நிலை மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் விவசாய நிலங்களுக்கு அருகில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.