திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசனம்பட்டி ஊராட்சியில் இன்று கடந்த நான்கு மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி 4034 கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் பதவியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் உடன் இருந்தனர்.