திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 15 விவசாயிகள் 1778 கிலோ தேங்காய் பருப்பை 49 மூட்டைகளில் கொண்டு வந்தனர். இதில் பங்கேற்ற 9 வியாபாரிகள், தரத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ. 139, குறைந்தபட்சமாக ரூ. 118, சராசரியாக ரூ. 125 என ஏலம் எடுத்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 340 என அதிகாரிகள் தெரிவித்தனர்.