சென்னை: அமைச்சர் கமலி காட்டிய மனிதநேயம்

தமிழக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமலி அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் கமலியின் இந்தச் செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்தச் செய்தி வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. 28 வயதான எஸ். கமலி, தமிழக அமைச்சரவையிலேயே மிக இளவயது பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி