மடத்துக்குளம் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பி உயர்தர சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், கழுதை மாரியம்மன் கோவில் அருகே அமைய உள்ள மின் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தியும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் அன்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி