மடத்துக்குளம் பகுதியில் பீட்ரூட் விலை தொடர் சரிவு

திருப்பூர் மாவட்டம் மதத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணபதிபாளையம் பூலாங்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீட்ரூட் அறுவடை துவங்கியுள்ளது. கடந்த வாரம் வரை 25 கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது வரத்து அதிகரிப்பால் 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

உடுமலைகளில் விளையும் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தை வாய்ப்புகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி