திருப்பூர் மடத்துக்குளம் அருகே பள்ளபாளையம் ஊராட்சி வழியாக திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நால்வரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் இல்லாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தானியங்கி சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.