திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் ஆணையம் நியமித்துள்ள வாக்குச்சாவடி முகவர்களிடம் விண்ணப்பத்தைப் பெற்று, குறிப்பிட்ட காலதிற்குள் பூர்த்தி செய்து கொடுத்து, அவரவர் வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.