திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து அமராவதி அணைக்குச் சென்ற அரசுப் பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்ததும் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். கிராமப்புற பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.